டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு
டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு என்பது நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக இணைவுபெற்ற மீன்வளக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 2017-18 கல்வி ஆண்டு முதல் செயல்படுகிறது. இக்கல்லூரியில் மீன்வளம் தொடர்பான இளநிலை அறிவியல் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இப்படிப்பிற்கு ஆண்டு தோறும் 60 மாணவர்கள் பொது கலந்தாய்வின் மூலம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
Read article